;
Athirady Tamil News

வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த குடும்பத்தினருக்கு ஏற்பட்ட நிலை…!!

0

வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் வைத்து 10 வயதான மகனை செல்போனால் தாக்கிய தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குடும்பத் தகராறு தொடர்பான விசாரணைக்காக குறித்த நபரும், அவரது மனைவியும், மகனும் பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்கள்.

இவர்கள் சில காலம் இத்தாலியில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் அண்மையில் இலங்கை திரும்பியுள்ளனர்.

இலங்கை திரும்பிய பின்னர், கணவர் தன்னை துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி வருவதாக மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாடு தொடர்பான விசாரணைக்கு குறித்த பெண் தனது மகனுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது அவர் தனது மகனை தாக்கியுள்ளார். இதனையடுத்து முறைப்பாடு குறித்து விசாரிப்பதை நிறுத்தி விட்டு, பொலிஸார் சந்தேகநபரை கைதுசெய்துள்ளனர்.

இதேவேளை, சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 2 =

*