;
Athirady Tamil News

கோர விபத்தில் தந்தையும், ஆறு வயது மகனும் பலி…!!

0

மாத்தறை கதிர்காமம் பிரதான வீதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் தந்தையும், மகனும் பலியானர்.

அவர்கள் பயணித்த உந்துருளி, வீதிக்கு அருகிலிருந்த மின்கம்பம் ஒன்றில் மோதியதில் நேற்று இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

29 வயதுடைய தந்தையும், அவரது 6 வயது மகனுமே இந்த விபத்தில் பாலியானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற போது உத்துருளியின் பின் இருக்கையில் அமர்ந்து சென்ற மற்றுமொரு சிறுவன் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, எம்பிலிப்பிட்டிய போகல்ஆர – கச்சிகள குளத்தில் நீராடிய 12 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் நீரில் மூழ்கி பலியானார்.

தமது சகோதரர் மற்றும் சகோதரியின் கணவர் ஆகியோருடன் நேற்றைய தினம் நீராடச் சென்றபோதே குறித்த மாணவி உயிரிழந்துள்ளார்.

மாணவியுடன் நீராடிய அவரது சகோதரி, நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதன்போது, பிரதேச மக்கள் அவரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty + fourteen =

*