புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி…!! (படங்கள்)

பலத்த விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி
2018 உள்ளுராட்சி சபைத் தேர்தலில் பலத்த விமர்சனங்கள் ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டன. அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது சரமாரியான விமர்சனங்களை கட்டவிழ்த்துவிட்டன.
எனினும் அனைத்தையும் சாமர்த்தியமாக எதிர்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 12 வட்டாரங்களில் 11 வட்டாரங்களை நேரடியாக வெற்றிகொண்டது.
அதன் அடிப்படையில் தவிசாளர்களாக செல்லையா பிறேமகாந் மற்றும் அருளானந்தம் தவகுமாரன் ஆகியோர் தலா இரண்டு வருடங்கள் என்ற ரீதியில் 15.02.2018 அன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.
மூன்று தசாப்தங்களின் பின் நடைபெற்ற தேர்தல் என்பதால் இப்பிரதேசம் முக்கியத்துவம் பெற்றது. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்களின் தலைமையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இப்பிரதேசத்தில் தேர்தலை எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
தகவல்
திரு.சிவமோகன்(எம்.பி)