;
Athirady Tamil News

பிரதமராக நினைக்காமல் என்னை நண்பராக கருதுங்கள்: மாணவர்களிடையே மோடி பேச்சு..!!

0

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கான முழுத்தேர்வுகள் நெருங்கிவரும் நிலையில், தேர்வு பயத்தை எதிர்கொள்வது, போட்டி தேர்வுகளில் வெற்றியடைவது தொடர்பாக பல்லாயிரக்கணக்கான மாணவர்களிடமிருந்து பிரதமரின் அலுவலகத்துக்கு கடிதங்கள் வந்திருந்தன.

இதையடுத்து, டெல்லியில் உள்ள டால்கோட்ரா விளையாட்டு அரங்கத்தில் ‘பரீக்‌ஷா பே சர்ச்சா’ (தேர்வுகள் தொடர்பான விவாதம்) என்னும் நிகழ்ச்சிக்கு இன்று பிரதமர் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, பள்ளி மாணவ-மாணவியரின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்ததுடன் மனஅழுத்தத்தை வென்று, தேர்வுகளை எதிர்கொள்ள தன்னம்பிக்கை மிகவும் அவசியம் என்று வலியுறுத்தி உரையாற்றினார்.

‘இன்று உங்கள் முன்னால் நான் ஒரு மாணவனாக நிற்கிறேன். நீங்கள் எனக்கு தேர்வாளர்கள். இந்த நாட்டின் பிரதமராக நினைக்காமல் உங்கள் நண்பராக கருதி எனக்கு நீங்கள் மதிப்பெண் அளிக்கலாம்’ என்று அவர் குறிப்பிட்டார்.

எல்லாவற்றுக்கும் கடுமையாக உழைத்து நாம் அனைவருமே தயாராகிறோம். ஆனால், தன்னம்பிக்கை இல்லாமல் போனால், கடைசி நிமிடத்தில் சிலவற்றை நாம் மறந்து விடக்கூடும். நமக்கு நாமே சவால்விட்டு, கடுமையாக உழைப்பதன் மூலம்தான் தன்னம்பிக்கை உருவாகிறது.

கவனித்தல் என்பது கற்பதற்கு அரியதொரு கலை என்று மக்கள் நினைப்பதுண்டு. ஆனால், அது உண்மையல்ல. நாள்தோறும் நாம் அனைவருகே முழுகவனம் தேவைப்படும் ஏதோ ஒன்றை செய்து கொண்டுதான் இருக்கிறோம். எப்போதுமே நம்மை மேம்படுத்திக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.’ என்றும் அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × two =

*