;
Athirady Tamil News

இரத்மலானை விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றம்..!!

0

வர்த்தக சிவில் விமான நடவடிக்கைகளுக்கான இலங்கையில் அமைக்கப்பட்ட முதலாவது விமானநிலையமான இரத்மலானை விமான நிலையத்தை, தேசிய மற்றும் சர்வதேச விமான சேவை வசதிகளை செயற்றிறனாக வழங்குகின்ற விமான நிலையமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விமான நிலையத்தினை அபிவிருத்தி செய்வதற்காக தயாரிக்கப்பட்ட, 2018ம் ஆண்டிலிருந்து 2030 ஆண்டு வரையில் செயற்படுத்துகின்ற உபாய முறை திட்டங்கள் அடங்கிய வே டு 2030 (Way to 2030) ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நீண்ட காலமாக அபிவிருத்தி திட்டத்தினை செயற்படுத்துவது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வழங்கிய ஆவணங்களுக்கே மேற்படி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அண்மையில், இரத்மலானை விமான நிலையத்தில் சிவில் விமான நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்து, இதற்காக விமானநிலையத்தின் ஓடுபாதைக்கு தெற்கு பிரதேசத்திலுள்ள 25 ஏக்கர் அளவிலான நிலப்பகுதியினை சிவில் விமான சேவை நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டு, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சமர்ப்பித்த ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1938ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட இரத்மலானை விமானநிலையத்தை, 1961ஆம் ஆண்டில் கட்டுநாயக்க விமானநிலையம் திறக்கப்படும் வரையில் தேசிய மற்றும் உள்ளூர்விமானநிலைய நடவடிக்கைகளுக்கான பயன்படுத்தப்பட்டமையும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − twenty =

*