;
Athirady Tamil News

ரயான் ஜயலத்தை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை உத்தரவு…!!

0

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மருத்துவப்பீட மாணயப் பிரிவு இணைப்பாளரான ரயான் ஜயலத் உள்ளிட்ட இருவரை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் தொடரப்பட்ட வழக்கில் முன்னிலையாகாத காரணத்தினால் நீதவான் லங்கா ஜயரத்ன இந்த பிடியாணை உத்தரவை இன்று வெள்ளிக்கிழமை பிறப்பித்தார்.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் அதன் கீழ் இணைந்துள்ள மாணவ இயக்கங்களும் கடந்த ஜனவரி மாதம் 25ஆம் திகதி மாலம்பே தனியார் மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு எதிராக மாபெரும் எதிர்ப்பு பேரணியொன்றை நடத்தியிருந்தன.

சைட்டம் என்ற குறித்த தனியார் பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்கி ஏனைய அரச பல்கலைக்கழகங்களைப் போன்று அதனை நடத்துவதற்கும், மருத்துவபீட மாணவர்களுக்கு அங்கு பயிற்சிகளை வழங்கவும் அரசாங்கம் அறிவித்தது.

எனினும் நல்லாட்சி அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் இதுவரை சரிவர அமுல்படுத்தப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி இந்த ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டது.

குறித்த பேரணிக்கு நீதிமன்றத்தின் ஊடாக பொலிஸார் இடைக்காலத் தடையுத்தரவை பெற்றிருந்த போதிலும் அதனையும் மீறி ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்த மாணவ இயக்கத்தின் இணைப்பாளர் ரயான் ஜயலத் மற்றும் மடுகல்லே புத்தரக்கித்த தேரர் ஆகியோர் இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டுமென ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது.

எனினும் இன்றைய வழக்கு விசாரணையில் அவர்கள் இருவரும் முன்னிலையாகாத காரணத்தினால் அவர்களுக்கு எதிராக பிடியாணையை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen + 17 =

*