;
Athirady Tamil News

அலோஷியஸும் கசுன் பலிசேனவும் மீண்டும் நீதிமன்றில் முன்னிலை…!!

0

விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பேர்பச்சுவரல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோஷியஸ் மற்றும் அதன் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

நீதிமன்றத்தின் அனுமதிக்கமைய பொலிஸார் இவர்களிடமிருந்து வாக்குமூலங்களை பெற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அர்ஜூன் அலோசியஸின் சட்டத்தரணிகள், அவர்களுக்கு பிணை வழங்குமாறு அண்மையில் நீதிமன்றத்தை கோரியிருந்தனர்.

அதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தது.

இதேவேளை, பிணை முறி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனுக்கு குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குவதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நேற்றுடன் நிறைவு பெற்றது.

அவர் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றில் காரணங்கள் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை குற்ற புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு, கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன, கடந்த 5 ஆம் திகதி அழைப்பாணை பிறப்பித்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 + 1 =

*