;
Athirady Tamil News

கடற்படைத்தளக் காட்டுப்பகுதியிலிருந்து வெளிவந்த மலைப்பாம்பு…!!

0

திருகோணமலை உட்துறைமுகக் கடற்கரையில் இன்று வெள்ளிக்கிழமை காலை மலைப்பாம்பு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

இதை அவதானித்த மக்கள் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வனஜீவராசிகள் திணைக்களத்தினர் குறித்த பாம்பினை மிகுந்த போராட்டங்களுக்கு மத்தியில் உயிருடன் மீட்டுள்ளனர்.

அத்தோடு மீட்ட பாம்பினை வனப்பகுதி ஒன்றில் விடுவதற்காக அங்கிருந்து கொண்டு சென்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மூன்று மீற்றர் நீளமுடைய குறித்த பாம்பானது இலங்கைக் கடற்படைத்தளக் காட்டுப்பகுதியில் இருந்து வந்திருக்கக்கூடும் என வனஜீவராசிகள் திணைக்களத்தினர் சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 10 =

*