;
Athirady Tamil News

கட்டடம் இடிந்து வீழ்ந்த சம்பவம் தொடர்பான அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது..!!

0

கொழும்பு கிரான்ட்பாஸ் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வந்த கட்டடமொன்று இடிந்து வீழ்ந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கை கட்டட ஆராய்ச்சி அமைப்பினால் பொலிஸாரிடம் இன்று வெள்ளிக்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கிரான்ட்பாஸ் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுவந்த கட்டடமொன்று கடந்த புதன்கிழமை பிற்பகல் 3.15 அளவில் திடீரென இடிந்து வீழ்ந்திருந்தது.

இந்த சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்ததுடன் 9 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

குறித்த கட்டடம் தனியார் தேயிலை உற்பத்தி நிறுவனமொன்றின் களஞ்சியசாலைப் பகுதி என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இடிந்து வீழ்ந்த கட்டடம் தொடர்பில் கட்டட ஆராய்ச்சி அமைப்பினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

அதற்கமைய விசாரணை தொடர்பான அறிக்கை இன்று கட்டட ஆராய்ச்சி அமைப்பினால் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இடிந்து வீழ்ந்த கட்டடத்திற்கு அருகில் இருந்த கட்டடம் ஒன்று அதன் ஒப்பந்ததாரரால் உரிய பாதுகாப்பு முறைகள் மேற்கொள்ளப்படாமல் அகற்ற நடவடிக்கை மேற்கொண்டமை தெரிய வந்துள்ளதாக திட்ட அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty + seven =

*