;
Athirady Tamil News

நாங்கள் பூமியை எங்கள் தாயாக பார்க்கிறோம்: பிரதமர் மோடி பேச்சு..!!

0

டெல்லியில் உலக பொருளாதார அபிவிருத்தி மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

இயற்கைக்கு மரியாதை தருவது இந்தியாவின் கலாசாரம் ஆகும். நாங்கள் பூமியை எங்கள் தாயாக பார்க்கிறோம். இந்தியா வளர்ச்சியை நம்புகிறது. ஆனாலும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறது.

நமக்கு தேவையான அனைத்தையும் நாம் செய்கிறோம். மற்றவர்களும் வேறுபட்ட பொறுப்பு மற்றும் சமநிலை அடிப்படையில் அந்த உறுதிப்பாட்டை பூர்த்தி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறோம்

மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பு குறித்து நீண்ட வரலாறு உள்ளது. இயற்கையின் புனிதத்தை நம்பிக்கையுடன் அறிந்து வைத்திருப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம் என மோடி தெரிவித்தார்.

நிலையான இடத்திற்காக இணைந்து செயல்படுதல் என்பது இந்த மாநாட்டுக்கான கருப்பொருளாக இருந்தது. இந்த மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 2000 பேர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − 7 =

*