;
Athirady Tamil News

அலகாபாத் கும்பமேளாவுக்கு ரூ.1500 கோடி – உ.பி.யில் ரூ. 4.28 லட்சம் கோடி மாநில பட்ஜெட் தாக்கல்..!!

0

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசின் சார்பில் இன்று 4.28 லட்சம் கோடி ரூபாய்க்கான பட்ஜெட்டை நிதி மந்திரி ராஜேஷ் அகர்வால் இன்று தாக்கல் செய்தார்.

கடந்த ஆண்டைவிட இந்த (2018-19) நிதி ஆண்டுக்கான தொகை 11.4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டில் பன்டெல்கன்ட் அதிவிரைவு நெடுஞ்சாலை பணிகளுக்கு 650 கோடி ரூபாயும், கோரக்பூர் இணைப்பு அதிவிரைவு நெடுஞ்சாலை பணிகளுக்கு 550 கோடி ரூபாயும், பூர்வாஞ்சல் அதிவிரைவு நெடுஞ்சாலை பணிகளுக்கு 1000 கோடி ரூபாயும், ஆக்ரா-லக்னோ அதிவிரைவு நெடுஞ்சாலை பணிகளுக்கு 650 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மின்னணு இணைப்பின் வாயிலாக அரசு அலுவலகங்களை கணினிமயமாக்கி இணைக்கும் நடைமுறை செலவினங்களுக்கு 250 கோடி ரூபாய் துவக்ககால நிதி உருவாக்கவும், நடப்பு செலவினத்துக்கு 30 கோடி ரூபாய் ஒதுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மின்சார வாரிய திட்டங்களுக்கு 29,883 கோடி ரூபாயும், அலகாபாத் நகரில் வரும் 2019-ம் ஆண்டு நடைபெறும் கும்பமேளா விழாவுக்கு 1500 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சர்வ சிக்‌ஷா அபியான் திட்டத்தின்கீழ் அடிப்படை கல்விக்கு 18,167 கோடி ரூபாயும், மேல்நிலைப் பள்ளிகளை மேம்படுத்தி, தரம் உயர்த்த 480 கோடி ரூபாயும், மதிய உணவு திட்டத்துக்கு 2,048 கோடி ரூபாயும், மாணவ-மாணவியருக்கு பழவகைகளை அளிக்க 167 கோடி ரூபாயும், அரசுப் பள்ளிகளுக்கு தேவையான மேஜை, நாற்காலிகள், மதில் சுவர் கட்டுதல் மற்றும் குடிநீர் வசதிக்கு 500 கோடி ரூபாயும் இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 + 11 =

*