;
Athirady Tamil News

கனடா பிரதமர் ஜஸ்டின் டுருடேயூ நாளை இந்தியா வருகை..!!

0

இந்தியா-கனடா நாடுகளுக்கு இடையிலான பல்வேறு தரப்பு நல்லுறவுகளை பலப்படுத்தும் விதமாக கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் டுருடேயூ ஒருவார அரசுமுறைப் பயணமாக நாளை தனது மனைவி, குழந்தைகளுடன் புதுடெல்லி வந்தடைகிறார்.

வரும் 18-ம் தேதி ஆக்ரா நகரில் உள்ள தாஜ் மஹாலுக்கு செல்லும் டுரேடேயூ, 19-ம் தேதி குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் உள்ள சபர்மதி ஆசிரமத்துக்கு செல்கிறார். அங்கு இந்திய மேலான்மைக் கழகம் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், காந்திநகரில் உள்ள அக்‌ஷர்தாம் ஆலயத்தை பார்வையிடுகிறார்.

20-ம் தேதி மும்பை நகருக்கு செல்லும் டுருடேயூ, பிரபல தொழிலதிபர்களையும், இந்திய திரையுலகை சேர்ந்த பிரபலங்களையும் சந்தித்து ஆலோசனை நடத்துவார். 21-ம் தேதி பஞ்சாப் மாநிலம், அம்ரிஸ்டர் நகரில் உள்ள சீக்கிய பொற் கோவிலை பார்வையிட்ட பின்னர் டெல்லி திரும்புகிறார்.

22-ம் தேதி டெல்லியில் உள்ள பிரபல ஜாமா மசூதி மற்றும் கிரிக்கெட் விளையாட்டு அரங்கத்தை பார்வையிடுகிறார். அன்று மாலை கனடா-இந்திய தொழிலதிபர்கள் பங்கேற்கும் கருத்தரங்கில் சிறப்புரையாற்றுகிறார்.

23-ம் தேதி பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜை உள்ளிட்டோரை சந்தித்து பேசும் ஜஸ்டின் டுருடேயூ-வின் முன்னிலையில் இருநாடுகளுக்கும் இடையில் சில புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின்றன.

24-ம் தேதி மாற்றத்துக்கான இளைஞர்கள் கருத்தரங்கில் பேருரையாற்றும் ஜஸ்டின் டுருடேயூ, அன்றிரவு கனடா புறப்பட்டு செல்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 + 19 =

*