;
Athirady Tamil News

ஜாலிய விக்ரமசூரியவை கைது செய்ய மீண்டும் பிடியாணை…!!

0

அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவை கைது செய்ய மீண்டும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை விடுத்தது.

அமெரிக்காவில் இலங்கை தூதரக கட்டடம் ஒன்றை பெற்றுக்கொள்ள ஒதுக்கப்பட்ட நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு பிணை வழங்கிய மனைவி மற்றும் உறவுக்கார பெண்ணுக்கும் இன்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இதேவேளை, ‘கவர்ஸ் கோப்பரேட் சர்விசஸ்’ (Govars Corporation Servers) எனும் நிறுவனம் ஊடாக 30 மில்லியன் ரூபாவை முறையற்ற விதத்தில் ஈட்டிய குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ஐந்து பேருக்கான வழக்கில் சாட்சியம் தொடர்பான விசாரணை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றில், இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் முடிவடைந்து 6 நாட்கள் கடந்த நிலையிலும், அரசாங்கத்தினால் அரசாங்கத்தை ஸ்தாபிக்க முடியவில்லை.

அரச பொறிமுறை செயலிழந்து ஒரே இடத்தில் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரை பிரதமராக்கி ஸ்தாபிக்கப்படும் அரசாங்கத்திற்கு எதிர்கட்சியில் இருந்து ஒன்றிணைந்த எதிர்கட்சி ஆதரவை தர தயாராகவுள்ளதாக தெரிவித்தார்.

இந்த அமைச்சரவை கலைத்து தகுதியான ஒருவரை பிரதமராக நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 + one =

*