;
Athirady Tamil News

வவுனியா சிறிராமபுரம் திருஞானசம்பந்தர் வித்தியாலயம் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி…!! (படங்கள்)

0

வவுனியா சிறிராமபுரம் திருஞானசம்பந்தர் வித்தியாலயம் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி இன்று (16) மாலை 3.30 மணிக்கு கல்லூரியின் அதிபர் தே.சிறிதரன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் கலந்துகொண்டிருந்தார்.

விருந்தினர்கள் மாலை போட்டு பாண்ட் வாத்தியங்களுடன் அழைத்துவரப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

தேசியக்கொடியை வவுனியா வளாகத்தின் உடற்கல்வி போதனா ஆசிரியர் இ.சிவசேகரன், வடக்கு மாகாண கொடியை ஜி.ரி.லிங்கநாதனும், பாடசாலையின் கொடியை கல்லூரியின் அதிபரும் ஏற்றி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு விழையாட்டு வீரர்களால் சத்தியப்பிரமாணம் செய்யப்பட்டது.

விளையாட்டு நிகழ்வில் மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றதுடன் விசேட நிகழ்வாக மூவின மக்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் முகமாக நடன நிகழ்வு ஒன்றும் நடைபெற்றது.
விழையாட்டில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாடசாலை அதிபர் மற்றும் விருந்தினர்களால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.

விளையாட்டு நிகழ்வுகளை உடற்கல்வி ஆசிரியர் எஸ். நிரஞ்சன் நெறிப்படுத்தியிருந்தார்.
இந் நிகழ்வில் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதா க.சந்திரகுலசிங்கம், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தேசிய அமைப்பாளர் வ.யோகராஜா, கிராம உத்தியோகத்தர் க.தர்சன், அருட்சகோதரி டொனேற்றா மற்றும் ஆசிரியர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 + thirteen =

*