;
Athirady Tamil News

மொடலாக வலம்வந்தவர் அனாதையாக இறந்து கிடந்த பரிதாபம்..!!

0

பிரிட்டன் பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகே ரயில் நிலையத்தில் இறந்துகிடந்த வீடற்ற நபர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று முன்தினம் நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகே உள்ள Westminster சுரங்க ரயில் நிலையத்தில் வீடற்ற நபர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

கடும் குளிரின் காரணமாக இவர் இறந்தது தெரியவந்தது, இந்நிலையில் அவர் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்தவர் என்பதும், மொடல் என்பதும் தெரியவந்துள்ளது.அடிக்கடி வீடில்லாதவர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள அவசரகால தங்கும்விடுதியில் தங்கியதாக விடுதியை பராமரிக்கும் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும் அவருடைய பெயர் உட்பட மற்ற விபரங்கள் தெரியவில்லை எனவும் அறிவித்துள்ளது.கடந்தவாரமே ஹொட்டலில் வேலை செய்ய விண்ணப்பம் அளித்திருந்ததும் தெரியவந்துள்ளது.

தினம் யோகா செய்யும் வழக்கம் உடையவர், சிக்கலான நேரங்களில் சிறப்பாகவும் பாட்டு பாடுவாராம்.

இவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வரும் சமூகவலைத்தளவாசிகள், இதுபோன்றதொரு சம்பவம் நிகழக்கூடாது என பதிவிட்டுள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × three =

*