;
Athirady Tamil News

கொள்கை அடிப்படையில் இணையுமாறு தமிழ் கட்சிகளிடம் வடக்கு முதல்வர் கோரிக்கை…!!

0

தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உறுதியுடன் செயற்படும் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் கொள்கை ரீதியாக இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ள வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவ்வாறான நடவடிக்கையொன்றே தமிழ் மக்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வடக்கிலுள்ள பெரும்பாலான சபைகளில் எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்து செயற்படுவது குறித்து கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன.

இந்த நிலையில் உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதை மட்டுமே இலக்காகக் கொண்டவர்கள் எவருடைய காலை பிடித்தென்றாலும் ஆட்சியமைப்பார்கள் என்று தெரிவித்துள்ள வட மாகாண முதலமைச்சர், கட்சியைப் பற்றியோ – கொள்கை பற்றியோ சிந்திக்காத அவர்களை பொருட்படுத்தாது தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தியிருக்கின்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve + eighteen =

*