;
Athirady Tamil News

மீண்டும் ஒரு சந்திப்பிற்குத் தயாராகும் மைத்திரி, ரணில்…!!

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் மீண்டும் ஒரு முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டம் தொடர்பாக ஜனாதிபதியை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு சந்தித்து பேசவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அடுத்தவாரம் அளவில் குறித்த பேச்சுவார்த்தை இடம்பெறும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் அரசினுள் ஏற்பட்ட குழப்ப நிலைகள் காரணமாக ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் பல கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

எனினும், இதன்மூலம் தீர்வுகள் எட்டப்படாத நிலையில் அடுத்த வாரம் மீண்டும் ஒரு முறை இருவருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இது குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க கருத்து வெளியிடுகையில்,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கூட்டு எதிர்க்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் சந்திப்புக்களை நடத்தியுள்ளார். தேர்தல் முடிவுகளை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

வெள்ளம், வறட்சி போன்றவற்றினால் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பொருளாதாரம் பாதிக்கப்பட்டது, விலைவாசி உயர்வு கடந்த ஒரு ஆண்டு காலத்தில் முக்கிய பிரச்சினையாக இருந்தது.

மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராக வந்தால், அந்தப் பிரச்சினையை சபாநாயகர் தான் தீர்த்து வைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 + 20 =

*