;
Athirady Tamil News

நிறைவடைந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்து ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்…!!

0

உறுப்பினர்களைத் தேர்வு செய்வதில் பிரயோக ரீதியான சிக்கல்கள் இருக்கமாயின், நடைபெற்ற தேர்தலில் திருத்தங்களை மேற்கொள்ள முடியாது என உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே, நடைபெற்று முடிந்த உள்ளுர் அதிகார சபைத் தேர்தல் தொடர்பில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களை பயன்படுத்துவது பொறுத்தமானது என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், பதவி காலம் தொடர்பான அறிவிப்பு வெளியாக்கப்படும்வரை, உறுப்பினர்கள் தமது பதவி காலத்தை ஆரம்பிக்க முடியாது என அதன் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருத்தங்களை மேற்கொள்வதன் ஊடாக, எதிர்காலத்தில் இடம்பெறும் தேர்தல்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, பெண் பிரதிநிதித்துவத்தை தெரிவு செய்வதில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்காக குறித்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டி ஏற்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஏதாவது ஒரு கட்சி தாம் பெற்றுக்கொண்ட வாக்குவீதத்துக்கு அமைய, பெண் பிரதிநிதித்துவத்தை நியமிக்க முடியாவிட்டால், அதன் தாக்கம் ஏனைய கட்சிகளுக்கு ஏற்படாத வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

சில சபைகளில், இரண்டாவதாக வாக்குகளைப் பெற்றுக்கொண்ட கட்சிக்குத்தான் அனைத்து பெண் பிரதிநிதித்துவத்தையும் நியமிக்க வேண்டிய நிலைமை உள்ளது.

இதனை மாற்ற வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 1 =

*