;
Athirady Tamil News

காவற்துறைக்கு பயந்து உயிரை விட்ட இளைஞர்!! பிலியந்தலையில் சம்பவம்…!!

0

பிலியந்தலை – ஹெரலியாவல பிரதேசத்தில் கால்வாய் ஒன்றில் குதித்து காணாமல் போன இளைஞரின் உடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை கால்வாயில் மிதந்துக்கொண்டிருந்த நிலையில் குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக காவற்துறை தெரிவித்தது.

மோசடியாளர்கள் சிலரை கைது செய்வதற்காக கஹதுடுவ காவற்துறையினர் நேற்று மதியம் ஹெரலியாவல பிரதேசத்தில் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது, காவற்துறையினர் வருவதை அவதானித்த குறித்த இளைஞர் அருகில் இருந்த கால்வாயில் குதித்துள்ளார்.

அந்த சம்பவத்தின் பின்னர் பிரதேசவாசிகள் சிலர் கஹதுடுவ காவல்நிலையத்திற்கு சென்று குறித்த இளைஞர் காணாமல் போயுள்ளதாக தெரிவித்து எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 11 =

*