;
Athirady Tamil News

எமக்கு இறுதியாக கிடைத்த இரண்டு ஜனாதிபதிகளும் கொழுக்கட்டையும் மோதகமுமாகவே உள்ளனர்…!!

0

எமக்கு இறுதியாக கிடைத்த இரண்டு ஜனாதிபதிகளும் கொழுக்கட்டையும் மோதகமுமாகவே உள்ளனர். உருவம் வேறாக இருந்தாலும் அவர்களின் செயற்பாடுகள் ஒன்றாகவே உள்ளதாக கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் இணைப்பாளர் லீலாவதி தெரிவித்தார்.

இன்று சனிக்கிழமை கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம் இடம்பெறும் பகுதியில் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் விடய்தில் எவ்வித மாற்றத்தினையும் எதிர்பார்க்க முடியாது.

இரண்டு ஜனாதிபதியும் எமது பிள்ளைகள் தொடர்பில் மாறுபட்ட கருத்தையே தெரிவிக்கின்றனர். எமக்கு எமது பிள்ளைகளே வேண்டும். மாறாக அவர்களால் எமக்கு எவ்வித முடிவுகளையும் பெற்று தர முடியாதே உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

நாம் வீதி போராட்டத்தினை ஆரம்பித்து எதிர்வரும் 20ம் திகதி ஒரு வருடம் பூர்த்தியாகின்றது. இதுவரை எமக்கு உதவிய அனைத்து சிவில் அமைப்புக்கள், பொது மக்கள், வர்த்தகர்கள், அரசியல்வாதிகள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றறோம்.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாம் பாரிய அளவிலான போராட்டம் ஒன்றை செய்து ஐநாவிற்கு கேட்கும் வகையில் போராட்டத்தினை முன்னெடுக்க உள்ளோம். இதற்கு ஒத்துழைக்கும் வகையில் அனைத்து வர்த்தகர்கள், பொதுமக்கள், சிவில் அமைப்புக்களினுடைய ஒத்துழைப்பினையும் வேண்டி நிற்கின்றோம்.

அன்றய தினம் வடக்கில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடி எமது போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வேண்டுகின்றோம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven + 1 =

*