;
Athirady Tamil News

அணிலை காப்பாற்ற முயற்சித்தவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்…!!

0

எல்ல பகுதியில் அணில் ஒன்றின் உயிரை காப்பாற்ற முயற்சித்தவர்கள் 20 அடி பள்ளத்தில் வீழ்த்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எல்ல, தெமோதர 10ஆம் மைல்கல் பிரதேசத்தில் முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த அனர்த்தம் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரன் மற்றும் சகோதரி காயமடைந்த நிலையில் தொமோதர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் முச்சக்கர வண்டியில் பதுளை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது, வீதியில் பயணித்த அணிலை காப்பாற்ற முயற்சித்துள்ளனர்.

இதன்போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three − 1 =

*