;
Athirady Tamil News

பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞன் கைது…!!

0

முகநூல் ஊடாக பெண்ணொருவரின் புகைப்படத்தை எடுத்து அதனை மாற்றியமைத்து அந்த பெண்ணை அச்சுறுத்தி பல முறை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான இளைஞனையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் முகநூல் ஊடக பெற்றுக்கொண்ட பெண்ணின் புகைப்படத்தை மாற்றியமைத்து, அதனை பகிரங்கப்படுத்த போவதாக அச்சுறுத்தி பெண்ணை பல முறை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன் குறித்த பெண்ணிடம் 10 ஆயிரம் ரூபா பணத்தையும் சந்தேகநபர் பலவந்தமாக பெற்றுக் கொண்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

இதேவேளை சந்தேகநபரின் செல்போனில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பாதிக்கப்பட்ட பெண், மற்றுமொரு பெண்ணின் நிர்வாணப்படங்களை தாம் கைப்பற்றியுள்ளதாக எம்பிலிப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − four =

*