;
Athirady Tamil News

மரண வீட்டிற்கு சென்று திரும்பிய குடும்பத்திற்கு நேர்ந்த கதி…!!

0

ஹட்டன் – கண்டி பிரதான வீதியில் பேருந்தொன்றுடன், மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து கினிகத்தேன பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ள நிலையில் படுகாயமடைந்தவர்கள் கண்டி மற்றும் நாவலப்பிட்டி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கணவன் மற்றும் மனைவி, குழந்தையுடன் மரணவீட்டிற்கு சென்று கொட்டகலை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர்.

இந்த நிலையிலேயே ஹட்டனிலிருந்து, நாவலப்பிட்டி நோக்கி சென்ற பேருந்துடன் குறித்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் கணவன் மற்றும் மனைவி காயமடைந்துள்ள நிலையில் குழந்தை தெய்வாதீனமாக தப்பியுள்ளது.

இந்த நிலையில் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கினிகத்தேன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × two =

*