;
Athirady Tamil News

வவுனியாவில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரிடமிருந்து துப்பாக்கியும் ரவைகள் மீட்பு…!!

0

வவுனியாவில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரிடமிருந்து ரி56ரக துப்பாக்கியும், 611 ரவைகள் மீட்பு.

வவுனியா நெடுங்கேணி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரிடம் இருந்து ரி56ரக துப்பாக்கியும், 611 ரவைகளையும் மீட்டுள்ளதாக நெடுங்கேணி பொலிசார் பொலிசார் தொவித்துள்ளனர்.

நேற்று இரவு 7 மணியளவில் வீதி கடமையில் நின்ற போக்குவரத்து பொலிசார் அவ்வீதியால் பயணித்த மோட்டர் சைக்கிளை மறித்து சோதனை செய்த போதே குறித்த ரி56 ரக துப்பாக்கியும், ரவைகளும் மீட்கப்பட்டது.

நெடுங்கேணி மாறாயிலுப்பை நாகதம்பிரான் கோவிலடியில் போக்குவரத்துப் பொலிசார் வீதியால் சென்ற மோட்டார் சைக்கிளிலை மறித்து சோதனை மேற்கொண்டபோது ஒரு பையினுள் ரி 56ரக துப்பாக்கியும், 611ரவைகளும் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த மோட்டர் சைக்கிளை செலுத்தி வந்த வவுனியா, குளவிசுட்டான் பகுதியைச் சேர்ந்த 45வயதுடைய சிவசம்பு ஜெயரதன் என்ற நபரை கைது செய்துள்ளதாகவும், இதையடுத்து அவரது வீட்டிலும் பொலிசார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ள நெடுங்கேணிப் பொலிசார் குறித்த நபரை வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − 6 =

*