;
Athirady Tamil News

கரும்பு லோடு ஏற்றி வந்த டிராக்டருடன் கார் மோதி விபத்து- 5 பேர் உயிரிழப்பு..!!

0

உத்தர பிரதேச மாநிலம், பதான் மாவட்டம் பிசாலியில் நேற்று இரவு நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 2 குடும்பத்தினர், அங்கிருந்து பதான் நகருக்கு காரில் புறப்பட்டனர். காரில் மொத்தம் 16 பேர் பயணம் செய்துள்ளனர். நள்ளிரவில் பதான் அருகே உள்ள சகஸ்வான் பகுதியில் வந்தபோது, கரும்பு லோடு ஏற்றி வந்த டிராக்டர் மீது கார் மோதி விபத்துக்குள்ளனது.

இந்த விபத்தில் காரின் முன்பகுதி உருக்குலைந்தது. கார் டிரைவர், 2 குழந்தைகள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். 11 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவ்விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றி வந்ததாலும், அதிவேகமாக காரை ஓட்டி வந்ததாலும் விபத்து ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − ten =

*