;
Athirady Tamil News

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து – பா.ஜனதாவுக்கு சந்திரபாபு நாயுடு கெடு..!!

0

மத்திய பா.ஜனதா கூட்டணி ஆட்சியில் இடம் பெற்றுள்ள கட்சிகளில் தெலுங்கு தேசமும் ஒன்று.

கடந்த 1-ந்தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் ஆந்திர மாநிலத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. சிறப்பு அந்தஸ்து வழங்கப்படவில்லை. போதிய நிதியை ஒதுக்கவில்லை. இதனால் ஆந்திர முதல்-மந்திரியும், தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு கடும் அதிருப்தி அடைந்தார்.

ஆனாலும் பா.ஜனதா கூட்டணியில் நீடிப்பதாக அவர் அறிவித்தார். பாராளுமன்றத்தில் தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் இந்த விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுபட்டனர். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.க்களும் அவர்களுடன் இணைந்து பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக மத்திய பா.ஜனதா கூட்டணி அரசுக்கு மார்ச் 5-ந்தேதி வரை சந்திரபாபு நாயுடு கெடு விதித்துள்ளார். இது தொடர்பாக தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி. கேசினி சீனிவாஸ் கூறியதாவது:-

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 19 கோரிக்கைகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளோம். மார்ச் 5-ந்தேதிக்குள் எங்களது அனைத்து உறுதி மொழிகளையும் நிறைவேற்ற வேண்டும். அப்படி நடைபெறவில்லை என்றால் எங்களது முதல்-மந்திரி முடிவு எடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த பாராளுமன்ற கூட்டத்தொடர் வருகிற 5-ந்தேதி கூடுகிறது.

இந்த நிலையில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி 25 எம்.பி.க்களும் ஏப்ரல் 6-ந்தேதி ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்களும் எங்களுடன் இணைந்து ராஜினாமா செய்ய வேண்டும். மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் உள்ள 25 எம்.பி.க்களும் ஏப்ரல் 6-ந்தேதி விலக வேண்டும். சிறப்பு அந்தஸ்து நிதி வழங்காமல் மத்திய அரசு ஏமாற்றி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 + nine =

*