;
Athirady Tamil News

ஆரோவில் உதய தின விழா – பிரதமரின் புதுவை வருகை தேதி மீண்டும் மாற்றம்..!!

0

புதுச்சேரியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஆரோவில் சர்வதேச நகரம். அரவிந்தர் ஆசிரம அன்னையின் பெரும் முயற்சியால் 1967-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி இந்த நகரம் உருவாக்கப்பட்டது. இந்த நகரம் இந்த மாதம் 28-ம் தேதி 50-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த பொன் விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை ஆரோவில் நிர்வாகம் செய்துள்ளது. விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவரும் இந்த விழாவில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்து இருந்தார்.

பிப்ரவரி 28-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரி வருவார் என மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் தெரிவித்திருந்தார். பின்னர் அவரது வருகை தேதி மாற்றப்பட்டு, 24-ம் தேதி வருவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆரோவில் விழாவிற்கு வரும் பிரதமரின் வருகை தேதி மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால், பிரதமர் மோடியால் 24-ம் தேதி புதுச்சேரிக்கு வர இயலவில்லை என்றும், 25-ம் தேதி வருகை தர உள்ளதாகவும் மாநில தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 − 2 =

*