;
Athirady Tamil News

வவுனியாவில் பெண்களை தலைமையாக கொண்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு..!! (படங்கள்)

0

வவுனியாவில் பெண்களை தலைமையாக கொண்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் இன்று (17) மாலை 3.00 மணிக்கு தேக்கவத்த மாதர் சங்கத்தின் செயலாளர் திருமதி. எஸ்.சுதா தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா தேக்கவத்த மாதர் கிராம அபிவிருத்தி சங்கக் கட்டிட மண்டபத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் பணிப்பாளர் சரோஜா சிவச்சந்திரன் கலந்துகொண்டு உதவித்திட்டங்களை வழங்கி வைத்தார்.

யுத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட மற்றும் கணவனை இழந்த பெண்களை தலைமையாக கொண்ட குடும்பங்களுக்கு பொருளாதாரத்தை மேம்படுத்தும் முகமாக 18 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு உதவிகள் வழங்கப்பட்டிருந்தது. தையல் தொழில்.

ஊதுபத்தி செய்தல், சில்லறைகடை தொழில் மற்றும் கோழி வளர்ப்பு போன்ற தொழில்களுக்கு பொருட்கள் மற்றும் பண உதவிகள் வழங்கி வைக்கப்ட்டது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen + 4 =

*