;
Athirady Tamil News

வெளிநாட்டில் தனது மகனை தேடும் இலங்கை தந்தை…!!

0

17 வருடங்களின் பின்னர் வெளிநாடொன்றில் தனது மகனை தேடும் இலங்கையை சேர்ந்த தந்தை தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

வென்னப்புவ பிரதேசத்தை சேர்ந்த 55 வயதான அசித பெர்னாண்டோ என்பவரே, ஜப்பானில் தனது மகனை தேடி வருகிறார்.

அசித பெர்னாண்டோ, ஜப்பானில் உணவகம் ஒன்றை நடத்தி வந்த நிலையில், மர்மநபர்கள் சிலரினால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.

இந்தத் தாக்குதல் காரணமாக அவர் உயிரிழந்து விட்டதாக போலியான மரண சான்றிதழ் ஒன்று சமர்ப்பித்து கோடிக் கணக்கில் பணம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

1990ஆம் ஆண்டுகளில் ஜப்பானுக்கு சென்ற அசித அங்குள்ள பெண் ஒருவருடன் காதல் கொண்டுள்ளார். இதனையடுத்து 1996ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்து குறித்த ஜப்பானிய பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பின்னர் ஜப்பான் நகோயா நகரில் தனது மனைவியின் உதவியுடன் அவர் உணவகம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

எனினும் அவரது வீட்டிற்கு வரும் இலங்கை நண்பருக்கும் மனைவிக்கும் இடையில் காதல் தொடர்பு ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனால் அசித என்பவரின் குடும்ப வாழ்க்கை பாதியில் முடிந்துள்ளது.

இந்நிலையில் உணவகத்தை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அசிதவின் மோட்டார் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, அவரது இலங்கை நண்பர் உட்பட மூவர் இணைந்து அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலினால் கோமா நிலைக்கு சென்றவர் 4 மாதங்களாக ஜப்பான் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

பின்னர் அசிதவின் தந்தை அவரை இலங்கைக்கு அழைத்து வந்து ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் அவர் தற்போது குணமடைந்துள்ளார்.

அசிதவின் ஜப்பான் சொத்துக்கள் மற்றும் அவருக்கு கிடைக்க வேண்டிய இழப்பீடுகளை பெறுவதற்கு உறவினர்கள் நடவடிக்கை மேற்கொண்ட போதிலும் அவரது மனைவி, பொலிஸ் அதிகாரியின் உதவியுடன் திருமணம் செய்து கொண்டுள்ளமையினால் அதனை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் அசித – ஜப்பானிய பெண்ணுக்கு பிறந்த 17 வயதுடைய மகனை தேடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதற்காக அவர் மீண்டும் ஜப்பான் சென்று வந்துள்ளார்.

இது தொடர்பில் பல இடங்களில் முறைப்பாடு செய்து தனது மகனை கண்டுபிடித்து தருமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − 5 =

*