;
Athirady Tamil News

எஸ் பி திஸாநாயக்கவின் இல்லத்தில் கலந்துரையாடல்கள்…!!

0

அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமைக்கு எதிர்வரும் 48 மணிநேரத்தில் தீர்வு கிடைக்கும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி எதிர்ப்பார்த்துள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பேச்சாளர் ஒருவர் இதனை எமது செய்தி பிரிவிடம் தெரிவித்தார்.

குறித்த பிரச்சினை தொடர்பில் நேற்று பல்வேறு உள்ளக கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒன்றிணைந்த எதிரணி அமைச்சு பதவிகளை ஏற்று கொள்ள இணங்கினால், நிலையான அரசாங்கம் ஒன்றை அமைக்க எந்த விதமான பிரச்சினைகளும் ஏற்படாது என அவர் குறிப்பிட்டார்.

அது குறித்த கலந்துரையாடல் ஒன்று இன்று இரவு இடம்பெறும் எனவும் ஸ்ரீ லங்கா சுத்திர கட்சியின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

எனினும் பிரதமர் ரணில் விக்கரமசிங்க எந்த ஒரு நிலையிலும் ஜனாதிபதியுடன் இணைந்து செய்யற்படுவது தொடர்பில் இணக்கப்பட்டு எட்டப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீ சுதந்திர கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, அமைச்சர் எஸ் பி திஸாநாயக்கவின் இல்லத்தில் நேற்றும் இரவு மற்றும் இன்று பிற்பகல் வேளைகளில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தை அமைக்கப்பது தொடர்பில் நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதாக ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − 7 =

*