;
Athirady Tamil News

நிரவ் மோடி விவகாரத்தில் பிரதமர் வாய் திறக்காதது ஏன்? ராகுல் காந்தி..!!

0

மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை மூலம் ரூ.11,700 கோடிக்கு மோசடி செய்து வெளிநாட்டுக்கு குடும்பத்துடன் தப்பிச் சென்று விட்டார்.

சி.பி.ஐ. புகார் தெரிவித்த உடனேயே கடந்த ஜனவரி 1-ம் தேதி அவர் தலைமறைவானது தெரிய வந்தது. தற்போது நியூயார்க்கில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியானது. அவருடன் உறவினர் மெகுல் சோசி மற்றும் குடும்பத்தினர் தங்கியுள்ளனர்.

இவர்களை கைது செய்வதற்காக சி.பி.ஐ. சர்வதேச போலீஸ் உதவியை நாடியுள்ளது. இதற்காக நேச நாட்டைச் சேர்ந்த குற்றவாளி ஒருவரை கண்டுபிடிக்க பிறப்பிக்கப்படும் பரவல் அறிவிப்பை வெளியிடுமாறு சர்வதேச போலீசை கேட்டுக் கொண்டுள்ளது.

இதற்கிடையே நிரவ் மோடிக்கு உடந்தையாக செயல்பட்ட பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் 3 பேரை சி.பி.ஐ. இன்று கைது செய்துள்ளது.

இந்நிலையில், பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்த நிரவ் மோடி விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி வாய் திறக்காதது ஏன்? என காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் புதிய வழிகாட்டும் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று மாலை நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த முறைகேடு குறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும். இந்த மோசடி அரசு அதிகாரிகளுக்கு தெரியாமல் நடந்திருக்காது. என்னை இதில் தொடர்புபடுத்தி பா.ஜ.க. இந்த மோசடி விஷயத்தை திசைதிருப்ப முயற்சி செய்கிறது.

ஒன்றரை மணி நேரத்தில் பரீட்சையை எதிர்கொள்வது எப்படி என பிரதமர் மோடி மாணவர்களுக்கு கற்றுத்தருகிறார். ஆனால் இந்த வங்கி மோசடிக்கு காரணமானவர்கள் யார் என்பதை நாட்டுக்கு சொல்ல தவறிவிட்டார்.

பிரதமர் மோடியும், நிதிமந்திரி அருண் ஜெட்லியும் இந்த விவகாரம் குறித்து எதுவும் கருத்து கூறாதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × five =

*