;
Athirady Tamil News

இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதியை கைது செய்த டெல்லி போலீசாருக்கு ராஜ்நாத் சிங் பாராட்டு..!!

0

உத்தரப்பிரதேசம் மாநிலம் அசம்கர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட அரிஷ் கான் (எ) ஜுனைத், இந்தியாவில் நடந்த ஐந்துக்கும் மேற்பட்ட குண்டுவெடிப்புகளில் தொடர்புடையவர் என்று கூறப்பட்டது. இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த இவர் கடந்த 2008-ல் போலீசார் நடத்திய என்கவுண்டரில் தப்பித்து ஓடிவிட்டார். அவரது தலைக்கு தேசிய புலனாய்வு முகமை 10 லட்சம் ரூபாயும், டெல்லி போலீசார் 5 லட்சம் ரூபாயும் விலை நிர்ணயித்தனர்.

இதற்கிடையே, டெல்லியில் சிறப்புப்படை போலீசார் அரிஷ் கானை கடந்த 14-ம் தேதி கைது செய்தனர்.

இந்நிலையில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதி அரிஷ் கானை மடக்கி பிடித்த டெல்லி போலீசாருக்கு உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

டெல்லி போலீஸ் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதி அரிஷ் கானை மடக்கி பிடித்த டெல்லி போலீசாருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். டெல்லி போலீசாரின் வளர்ச்சி நிதிக்காக உள்துறை அமைச்சகம் ரூ. 5 கோடி ஒதுக்கியுள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள மக்கள் டெல்லி போலீசாரிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கின்றனர். அவர்களை ஊக்குவிப்பதன் மூலம் அவர்கள் இன்னும் கூடுதல் கவனத்துடனும், மிகுந்த எச்சரிக்கையுடனும் செயல்படுவார்கள் என எதிர்பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen + fourteen =

*