;
Athirady Tamil News

ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவியின் அருகே அமர்ந்து சுய இன்பம் – தகவல் அளித்தால் ரூ.25 ஆயிரம்..!!

0

டெல்லியின் வசந்த் விஹார் பகுதியில் இருந்து கடந்த வாரம் புறப்பட்டுச் சென்ற அரசு பேருந்தில் ஏறிய ஒருவன் ஒரு டெல்லி பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் ஒரு இளம்பெண்ணின் பக்கத்தில் காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்தான்.

அந்த பெண்ணின் இடுப்பை கிள்ளி, பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட அந்த காமுகன், சற்று நேரத்தில் பொது இடம் என்றும் பாராமல் சிறிதும் கூச்சமின்றி சுய இன்பத்தில் ஈடுபட தொடங்கினான். இதைகண்டு பதற்றமடைந்த அந்தப் பெண்ணின் கூச்சலை பேருந்தில் இருந்த யாரும் பொருட்படுத்தவில்லை.

இதனால், வேதனையடைந்த அந்த மாணவி, தனது செல்போனால் அவனது சேட்டைகளை வீடியோ காட்சியாக படம் பிடித்தார். அந்த காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்ததுடன் கடந்த 10-ம் தேதி அந்நபர் மீது வசந்த் விஹார் போலீஸ் நிலையத்தில் புகாரும் அளித்தார்.

சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய இந்த அவமானகரமான சம்பவம் நடந்து ஒருவாரம் ஆகியும் குற்றம்சாட்டப்பட்ட நபர் பிடிபடாத நிலையில் அந்த வீடியோவில் இருக்கும் காமுகனை பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் சன்மானம் அளிக்கப்படும். தகவல் அளித்தவரின் பெயர் ரகசியமாக பாதுகாக்கப்படும் என டெல்லி போலீசார் இன்று அறிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − 15 =

*