;
Athirady Tamil News

அமைச்சர் அர்ஜூன ரணதுங்க யாழ். விஜயம்..!! (படங்கள்)

0

பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றினை இன்றைய தினம் மேற்கொண்டுள்ளார்.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகவர்களுடனான கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்குமுகமாக அவர் யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்துள்ளார்.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஏற்பாட்டில் யாழ். பொது நூலகக் கட்டடத்தில் குறித்த கலந்துரையாடல் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

வடமாகாணத்தில் பெற்றோலிய எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் பெற்றோலிய தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்வதற்கான வழி முறைகள் தொடர்பாக குறித்த கலந்துரையாடலில் ஆராயப்பட்டு வருகின்றது.

இதன்போது, பெற்றோலிய அமைச்சின் அதிகாரிகள், வடமாகாண பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமையாளர்கள், மற்றும் உயர் அதிகாரிகள், முகவர்கள் எனப்பலர் கலந்துகொண்டுள்ளனர்.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 − 6 =

*