;
Athirady Tamil News

யாழில் கொள்ளை – வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட மூவர் கைது..!! (படங்கள் & வீடியோ)

0

யாழில் பல்வேறு பகுதிகளில் கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களுடன் தொடர்பு பட்டவர்கள் எனும் சந்தேகத்தில் மூவரை கோப்பாய் பொலிசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 14ஆம் திகதி திருநெல்வேலி பகுதியில் வீதியால் சென்று கொண்டிருந்த பெண் ஒருவரின் நகையை பறித்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர்கள் சந்தேகத்தில் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, யாழ். நாவற்குழி பகுதியை சேர்ந்த 20 மற்றும் 23 வயதுடைய மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை உருக்கி உருமாற்றம் செய்து வந்தவர் எனும் சந்தேகத்தில் யாழ்.நகரில் நகை கடை ஊழியர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 15பவுண் தங்க கட்டிகள் மீட்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 + 14 =

*