;
Athirady Tamil News

அரச நாடக விழா அமைப்பு முறையில் மாற்றங்கள்…!!

0

அரச நாடக விழா மார்ச் மாதம் 27ஆம் திகதி கொழும்பு நெலும்பொக்குன கலையரங்கில் இடம்பெறவுள்ளது.

உலக நாடக தினத்தை அடிப்படையாகக் கொண்டு இம்முறை அரச நாடக விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அனுஷா கோகுல தெரிவித்தார்.

இம்முறை நாடக விழா 46ஆவது தடவையாக இடம்பெறுகிறது. நாடக விழாவிற்கான இறுதிச் சுற்று நாடகங்கள் நேற்று முன்தினம் டவர் மண்டபத்தில் ஆரம்பமாகின. இந்த இறுதிச்சுற்று நாடகங்கள் அடுத்த மாதம் 26ஆம் திகதி வரை மேடையேற்றப்படும்.

இவற்றில் தெரிவு செய்யப்படும் சிறந்த நாடகங்களுக்கு அரச நாடக விழாவில் விருதுகள் வழங்கப்படும். அடுத்தக்கட்டம் முதல் அரச நாடக விழா அமைப்பு முறையில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்று திருமதி அனுஷா கோகுல மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − seven =

*