;
Athirady Tamil News

வவுனியா இறம்பைக்குளம் அருள்மிகு ஸ்ரீ கருமாரி நாபூசணி அம்பாள் மகோற்சவம்…!! (படங்கள்)

0

இலங்கை தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருத நில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னிதிருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட நாகங்கள் புடை சூழ்ந்து காவல் செய்ய நவரத்தின பீடத்தில் தேவாதி தேவர்கள் புடைசூழ்ந்து ஐந்து தலை நாகத்தின் கீழ் ஸ்ரீ சக்கரத்துடன் கூடிய ஸ்ரீ சக்கர நாயகியாய் வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை மனமுவந்து அள்ளி அருளமுதாய் கொடுத்து அருளாட்சி புரிந்து கொண்டிருக்கும் அன்னை ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாளின் பத்தாம் ஆண்டு மகோற்சவ பெருவிழா

நிகழும் ஏவிளம்பி வருடம் மாசி மாதம் 08ஆம்நாள் (20.02.2018) செவ்வாய்க்கிழமை பஞ்சமி திதியும் ரேவதி நட்சத்திரமும் சித்தாமிர்தயோகமும் கூடிய சுபதினத்தில் பகல் 11.05மணிக்கு கொடிஏற்றதுடன் ஆரம்பமாகவுள்ளது .

மேற்படி மகோற்சவம் ஆலய மகோற்சவகுரு சிவஸ்ரீ முத்து ஜெயந்தி நாத குருக்கள் தலைமையில் இடம்பெறுகின்றது.

மேற்படி மகோற்சவத்தில்

23.02.2018 வெள்ளிகிழமையன்று கற்பூர சட்டி திருவிழா

27.02.2018 செவ்வாய்கிழமையன்று சப்பர திருவிழா

28.02.2018 புதன்கிழமையன்று தேர்த்திருவிழா

29.02.2018 வியாழக்கிழமையன்று தீர்த்த திருவிழா

30.02.2018 வெள்ளிகிழமையன்று பூங்காவன திருவிழாவும் இடம்பெறுகின்றது.

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 + fifteen =

*