;
Athirady Tamil News

இன்று அதிகாலை இடம்பெற்ற கோர சம்பவம்…!!

0

தலங்கம, விமலதிஸ்ஸ மாவத்தையில் இன்று அதிகாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணமடைந்தார்.

வீடொன்றில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவத்தில் கணவன் மற்றும் மனைவி ஆகியோர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஆண் மரணமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உந்துருளியில் சென்ற அடையாளம் தெரியாத இருவர், தம்பதியினர் வசிக்கும் வீட்டில் நுழைந்து தாக்குதலை நடத்தியுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை இடம்பெற்ற கோர சம்பவம் தலங்கம பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

அதிகாலை 2.30 மணியளவில் உந்துருளியில் பயணித்துள்ள இருவர் இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

கணவர் மற்றும் மனைவி மீதே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், காயமடைந்துள்ள குறித்த இருவரும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கணவர், மனைவி நித்திரையில் இருக்கும் போது, கதவினை உடைத்து வீட்டினுல் நுழைந்து இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சந்தேக நபர்களை கைது செய்வதற்கு தலங்கம காவற்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × one =

*