;
Athirady Tamil News

பொதுத்துறை வங்கிகளில் இருந்து கடந்த 4 ஆண்டுகளில் ரூ.22,743 கோடி மோசடி..!!

0

குஜராத் மாநிலத்தை சேர்ந்த வைர வியாபாரியான நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியிலிருந்து ரூ.11,400 கோடி மோசடி செய்துவிட்டு வெளிநாடுக்கு தப்பியோடி விட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து வங்கித்துறையில் நடந்த பல மோசடிகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

மத்திய தகவல் தொழில்நுட்ப துறை மந்திரி ரவி சங்கர் பிரசாத், நாடாளுமன்றத்தில் சமீபத்தில் ரிசர்வ் வங்கி தகவல்களை அடிப்படையாக வைத்து கூறுகையில், 2017 டிசம்பர் 21 வரையிலான நிலவரப்படி, வங்கி மோசடி தொடர்பாக 25,600 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல்படி, 2016-17ன் முதல் 9 மாதங்களில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் 455 மோசடி வழக்குகளும், பாரத ஸ்டேட் வங்கியில் 429 வழக்குகளும், ஸ்டாண்டர்ட் சாட்டர்ட் வங்கியில் 244 மோசடி வழக்குகளும், ஹெச்.டி.எப்.சி. வங்கியில் 237 மோசடி வழக்குகள் பதிவாகியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியை சேர்ந்த 64 ஊழியர்கள், 49 ஹெச்.டி.எப்.சி. வங்கி ஊழியர்கள், மற்றும் 35 ஆக்சிஸ் வங்கி ஊழியர்கள் மீது மோசடி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2016ல் சிண்டிகேட் வங்கியில் 4 பேர், மொத்தம் 386 கணக்குகளை துவக்கி போலியாக காசோலைகள் மூலமாகவும், எல்.ஐ.சி. பாலிசி கிரெடிட் போன்றவற்றின் மூலமாகவும், சுமார் 1000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தாண்டு, ஆந்திரா வங்கி இயக்குநரை சுமார் 500 கோடி ரூபாய் அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதற்காக அமலாக்கத்துறை கைது செய்தது. குஜராத்தை சேர்ந்த மருந்து நிறுவனம் ஒன்றிற்கு உடந்தையாக இந்த மோசடி நடத்தப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகள் 2012 மற்றும் 2016ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், ரூ.22,743 கோடி அளவுக்கான பணத்தை மோசடிகளால் இழந்துள்ளது என பெங்களூர் ஐ.ஐ.எம். தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 5 =

*