தமிழ் மொழிக்கு ஆதரவான பேசிய மோடியின் கூற்று பெருமிதம் தருகிறது – கவிஞர் வைரமுத்து..!!

மாணவர்கள் மத்தியில் நேற்று முன்தினம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, சமஸ்கிருதத்தைவிட பழமையானது தமிழ் மொழி என்றும், மிகவும் அழகான மொழி என்றும் கூறியிருந்தார்.
இது தொடர்பாக, கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்மொழி சமஸ்கிருதத்தைவிட தொன்மையானது என்று குறிப்பிட்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் கூற்று பெருமிதம் தருகிறது. மகிழ்ச்சி. மூத்த மொழிக்கான முன்னுரிமையையும், பெருமையும் தமிழுக்கு வழங்கப்படும் என்று நம்புகிறேன். அதற்கான அறிகுறியென்றே இதை அறிகின்றேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.