;
Athirady Tamil News

போதைப்பொருள் கடத்திய 27 பேரை காட்டிக்கொடுத்த மோப்ப நாய்..!!

0

சிவனொளிபாதமலையினை தரிசிப்பதற்காக சென்ற 27 பேரிடம் இருந்து கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைபொருள் நேற்றையதினம் (17.02.2018) சனிக்கிழமை இரவு ஹற்றன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினரால் கோரா என்ற மோப்ப நாயின் உதவியுடன் கைப்பற்றப்பட்டுள்ளது.

பிலியந்தலை, கெஸ்பேவ, களுத்துறை, ஹோமாகம மற்றும் கொழும்பு பிரதேசங்களிலிருந்து சிவனொளிபாதமலையினை தரிசிப்பதற்காக சென்றவர்களிடமிருந்தே மேற்படி கஞ்சா பக்கட்டுகளும், ஹெரோயின் பக்கட்டுகளும் கைப்பற்றப்பட்டன.

ஹற்றன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை தியகல பகுதியில் நேற்று(17.02.2018) சனிக்கிழமை இரவு வாகனங்களை ஹற்றன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினர் திடீரென சோதனை செய்தனா்.

இதன்போது 8 மில்லிகிராம் ஹெரோயினும், 59 ஆயிரத்து 750 மில்லிகிராம் கஞ்சா பக்கட்களும் கண்டு பிடிக்கப்பட்டன.

இதனையடுத்து குறித்த 27 பேரையும் கைது செய்த ஹற்றன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினர், ஹற்றன் நீதவான் முன்னிலையில் ஆஜர்செய்ய நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகத் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven + 13 =

*