;
Athirady Tamil News

முதலாளி மனைவியுடன் கள்ளக்காதல் – வாலிபர் கண்ணில் ஆசிட் செலுத்தி குருடாக்கிய கொடூரம்..!!

0

பீகார் மாநிலம் சமஸ்டிபூர் மாவட்டம் பாராவுனி கிராமத்தை சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவர் அதே பகுதியில் உள்ள பண்ணையில் டிராக்டர் டிரைவராக பணிபுரிந்தார்.

அப்போது அப்பண்ணை முதலாளியின் மனைவிக்கும், வாலிபருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் தனிமையில் சந்தித்து மகிழ்ந்தனர். அதை அறிந்த முதலாளி மனைவியை கண்டித்தார்.

எனவே, இருவரும் கடந்த 6-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர். அதை தொடர்ந்து தனது மனைவியை வாலிபர் கடத்திவிட்டதாக முதலாளி உதக்ரா போலீசில் புகார் செய்தார்.

அதை தொடர்ந்து இருவரையும் போலீசார் கண்டுபிடித்து கடந்த 16-ந்தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அப்பெண் தனது கணவருடன் வீட்டுக்கு சென்றார். வாலிபர் கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தார்.

இதற்கிடையே, அப்பெண்ணின் மைத்துனர் போலீஸ் நிலையம் வந்து தனது அண்ணன் மனைவி வாலிபருடன் வாழ விரும்புவதாகவும் அவரை வெளியே விடும்படியும் அழைத்து சென்றார். பின்னர் வாலிபர் ஒரு உணவு விடுதிக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு 20 பேர் கும்பல் திரண்டு சென்று வாலிபரை கடுமையாக அடித்து உதைத்தனர். பின்னர் வாலிபரின் கண்களில் ‘ஆசிட்’டை (திராகவம்) செலுத்தியது. இதனால் அவரது 2 கண்களும் குருடானது.

பின்னர் அவரை பக்வான்பூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட ஹனுமன் சவுக் பகுதியில் வீசி விட்டு சென்றனர். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு பீகுசாரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

நிரவ் மோடி நிறுவனத்தில் காங். தலைவர் அபிஷேக் சிங்வி மனைவி வாங்கிய ரூ.1½ கோடி நகை

புதுடெல்லி:

காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சிங்வி மனைவி நிரவ் மோடிக்கு சொந்தமான நகைக்கடை நிறுவனத்தில் இருந்து ரூ.1½ கோடி மதிப்புள்ள நகைகள் வாங்கி இருப்பது தற்போது வெளியாகி உள்ளது.

பஞ்சாப் நே‌ஷனல் வங்கி மோசடி மன்னன் நிரவ் மோடிக்கு காங்கிரசுடன் தொடர்பு இருப்பதாக மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன் குற்றம் சாட்டி இருந்தார்.

அதில், நிரவ் மோடியின் வைர நிறுவனம் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சிங்வி மனைவியின் சொத்தை குத்தகைக்கு எடுத்ததாகவும், இதில் அவருக்கும், நிரவ் மோடிக்கும் இடையே வர்த்தக தொடர்பு இருப்பதாகவும் நிர்மலா சீத்தாராமன் கூறி இருந்தார்.

இதை அபிஷேக் சிங்வி மறுத்தார். எங்களுக்கும், நிரவ் மோடிக்கும் இடையே எந்தவிதமான வர்த்தக தொடர்பும் கிடையாது. எங்கள் குடும்பத்துக்கு சொந்தமான இடத்தை நிரவ் மோடி நிறுவனம் வாடகைக்கு எடுத்திருந்தது. அந்த ஒப்பந்தமும் 2017 டிசம்பர் மாதத்துடன் முடிந்து விட்டது. இதனால் அவர்கள் காலி செய்து விட்டனர் என்று கூறினார்.

இதற்கிடையே அபிஷேக் சிங்வியின் மனைவி அனிதா சிங்வி நிரவ் மோடி நிறுவனத்தில் ரூ. 1½ கோடி மதிப்புள்ள நகைகளை வாங்கி இருப்பது இப்போது தெரிய வந்துள்ளது.

டெல்லியில் நிரவ் மோடி அலுவலகத்தில் சோதனையிட்ட சி.பி.ஐ. அதிகாரிகள் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினார்கள். அதில், நிரவ் மோடி தன்னிடம் நகை வாங்கும் முக்கிய நபர்களின் பட்டியலை பதிவு செய்து வைத்திருந்தார்.

அதில், அபிஷேக் சிங்வி மனைவியின் பெயர் இடம் பெற்றிருந்தது. அபிஷேக் சிங்வி மனைவி 20.5.2014, 21.8.2014, 17.1.2015 ஆகிய தேதிகளில் நகை வாங்கியதாகவும், ரூ.1½ கோடி அளவுக்கு இந்த நகைகள் வாங்கப்பட்டுள்ளது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரி கட்டுவதற்காக தயாரிக்கப்படும் ஆவணத்திலும் இது இடம்பெற்றுள்ளது. அனிதா சிங்வியின் பான்கார்டு எண்ணும் (வருமான வரி கணக்கு எண்) அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புகார் குறித்து அபிஷேக் சிங்வியிடம் கேட்ட போது, எனக்கு இதுபற்றி எதுவும் தெரியாது. இது தேவையில்லாமல் புனையப்பட்ட புகாராக இருக்கிறது என்று கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 + sixteen =

*