;
Athirady Tamil News

இரும்பு கம்பியால் தாக்கி ஒருவர் கொலை…!!

0

வெலிவேரிய – கிரிதிவெல வீதியின் ஹேனகம சந்தியில் இரும்பு கம்பியினால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருவருக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினையின் உச்ச கட்டமாகவே குறித்த தாக்குதல் நடந்துள்ளது.

குறித்த நபர் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ள நிலையில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படுபாகல – கண்டாவல பிரதேசத்தினை சேர்ந்த 47 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது தலை பகுதியிலும் காயம் ஏற்பட்டுள்ளதால் பொலிஸாரின் பாதுகாப்பில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen + 13 =

*