;
Athirady Tamil News

கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் அதிகம் பதிவாகியுள்ள வன்செயல் சம்பவங்கள்…!!

0

உள்ளுராட்சி மன்ற தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர், பதிவாகியுள்ள வன்செயல் சம்பவங்கள் கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்கும் அமைப்பான ‘பவ்ரலின்’ நிறைவேற்று இயக்குனர் ரோகன் ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

தேர்தல் வாக்களிப்பு இடம்பெற்ற போது, குறிப்பிடத்தக்க வகையில் வன்செயல் சம்பவங்கள் இடம்பெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எப்படியிருப்பினும், பெறுபேறுகள் வெளியாகியதன் பின்னர் 60 வன்செயல் முறைப்பாடுகள் தமது அமைப்பிற்கு கிடைக்கப்பெற்றதாக தெரிவித்துள்ளார்.

இந்த சட்டவிரோத நடவடிக்கைகளை பெரும்பாலும் தேர்தலில் வெற்றிபெற்றவர்களாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இப்படியான செயல்பாடுகளை கிராம மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் ‘பவ்ரல்’வலியுறுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine + five =

*