;
Athirady Tamil News

வவுனியாவில், “புளொட்” செயலதிபர் பிறந்தநாள் நிகழ்வும், “உமாமகேஸ்வரன் மன்ற” அங்குரர்ப்பண நிகழ்வும்.. (வீடியோ & படங்கள்)

0


வவுனியாவில், “புளொட்” செயலதிபர் பிறந்தநாள் நிகழ்வும், “உமாமகேஸ்வரன் மன்ற” அங்குரர்ப்பண நிகழ்வும்.. (வீடியோ & படங்கள்)

தேசியக்கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்தார்.

இன்று வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் நடைபெற்ற “புளொட்” செயலதிபர் உமாமகேஸ்வரனின் 63வது பிறந்தநாள் நிகழ்வும், “உமாமகேஸ்வரன் மன்ற” அங்குரர்ப்பண நிகழ்வின் போது, நடந்து முடிந்த உள்ளுராட்சி சபை தேர்தலிலே தமிழ் தேசிய கூட்டமைப்பு பல இடங்களில் அறுதி பெருன்பான்மையினை பெறவில்லை. இதனால் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் பட்சத்தில் தமிழ் மக்கள், தமிழ் தேசிய கூட்டமைக்கு வாக்களிக்காமல் ஐக்கிய தேசிய கட்சிக்கே வாக்களித்திருக்கலாம் என்ற கருத்து இருக்கு என்று ஊடகவியலாளர் ஒருவரினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

இம்முறை நடைபெற்ற உள்ளுராட்சி சபை தேர்தலிலே அறுதி பெரும்பான்மை என்பது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிழை இல்லை. குறிப்பாக வடக்கு கிழக்கில் பெரும்பான்மையான இடங்களிலே வெற்றி வாகை சூடினாலும் கூட, தற்போது உள்ள தேர்தல் முறையானது ஒரு குழப்ப நிலையை உருவாக்கியுள்ளது. இதனால் பாராளுமன்றம் போன்று வேறு கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றுவது உள்ளுராட்சி சபை சட்ட திட்டங்களில் இல்லை.

அகவே ஒரு சபையினை நடாத்துவதற்கு தலைவர் ஏனைய உறுப்பினர்களுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் சபை நடத்த முடியும். மேலும் சபையை நடாத்துவதற்கு தேசிய கட்சிகளுடன் சேர்ந்து தான் சபையை நடாத்த வேண்டும் என்பதற்கு எனக்கு உடன்பாடு இல்லை. ஏன்எனில் எங்களது இனப்பிரச்சனை இறுதி வடிவம் பெற்று தீர்க்கப்படும் வரை தேசியக்கட்சிகளுடன் இணைந்து செயற்படுவது என்பது தமிழ் மக்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாது, தனிப்பட்ட ரீதியில் என்னாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 + eleven =

*