;
Athirady Tamil News

மட்டக்களப்பில் கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை…!!

0

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஆறு கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் பெருமளவான கசிப்பு உற்பத்தி பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

நேற்று சனிக்கிழமை மாலை கொக்கட்டிச்சோலை முனைக்காடு பகுதியில் உள்ள களப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 07 கசிப்பு காய்ச்சும் வரல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் கசிப்பு உற்பத்திக்குரிய பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த ஐந்து தினங்களாக கொக்கட்டிச்சோலை பகுதியின் முனைக்காடு பகுதியை அண்டியுள்ள களப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஆறு கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

ஆறு பகுதிகளிலும் இருந்து சுமார் 29 கசிப்பு காய்ச்சுவதற்கான கோடிக்களுடன் கூடிய பரல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவற்றில் 7250 லீற்றர் கோடா மீட்கப்பட்டு அழிக்கப்பட்டதாக கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிசிர பண்டார தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் ஜயக்கொட ஆராயச்சி, சிரேஸ்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் சமன் யட்டவர ஆகியோரின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கொக்கட்டிச்சோலை சிவில் பாதுகாப்பு குழு, கிராமசேவையாளர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இது தொடர்பில் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் நாளை களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

சட்ட விரோத போதைப்பொருள் பாவனையை தடுக்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்துவரும் நடவடிக்கைககளுக்கு இணைவாக இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 + fourteen =

*