;
Athirady Tamil News

பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ள சம்பவம்…!!

0

தலவாக்கலை – லிந்துல – பெயார்வெல் பகுதியில் சிற்றூர்ந்து ஒன்று நீர்நிலை ஒன்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர்.

லிந்துல – ஹட்டன் நோக்கி பயணித்த குறித்த சிற்றூர்ந்து இன்று மாலை வீதியை விட்டு விலகி ஆறோன்றில் வீழந்துள்ளது.

இதனையடுத்து மேற்கொண்ட தேடுதல் பணிகளின் போது, அதில் பயணித்த இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர்கள் சிலாபம் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், குறித்த வாகனத்தில் மேலும் எவரும் இருந்திருக்க கூடும் என்ற சந்தேகத்தில் அடிப்படையில் தேடுதல் பணிகள் தொடர்வதாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.

இது குறித்த மேலதிக விசாரணைகளை லிந்துல காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

யுவதி ஒருவரும் இளைஞர் ஒருவரும் இவ்வாறு பயணித்துள்ள நிலையில் யுவதி சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் இளைஞன் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × one =

*