;
Athirady Tamil News

கார் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து : இருவர் உயிரிழப்பு..!! (படங்கள்) இணைப்பு

0

நுவரெலியா, லிந்துலை பெயார்வெல் பகுதியில் கார் ஒன்று 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில 2 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

நுவரெலியா பகுதியிலிருந்து கம்பஹா பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த காரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி 200 அடி பள்ளத்தில் மேலிருந்து கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர்வழங்கும் ஆக்ரோயா ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இவ்விபத்தில் காரில் பயணித்த 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த யுவதி கம்பஹா பகுதியைச் சேர்ந்த பியூமிசாந்த் பிரசாதி பெரேரா (வயது 24) என்றும் உயிரிழந்த இளைஞன் தொடர்பில் இதுவரை தகவல் கிடைக்கப்பெறவில்லை.

விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதோடு, உயிரிழந்த இருவரின் சடலங்களும் லிந்துலை வைத்தியசாலையின் பிரேதை அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை லிந்துலை மற்றும் தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − nine =

*