;
Athirady Tamil News

வவுனியாவில் மோட்டார் சைக்கிள் விபத்து…!!

0

வவுனியா வைரவ புளியங்குளம் யங் ஸ்டார் விளையாட்டு மைதானத்திற்கு அருகே இன்று மாலை 6.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில் ,வைரவ புளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்திலிருந்து குருமன்காடு நோக்கி பயணித்த துவிச்சக்கர வண்டி மீது எதிர்த் திசையிலிருந்து வந்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.

இவ் விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணம் செய்த சிறுவன் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

மோட்டார் வண்டியின் சாரதி தப்பித்து ஓடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மோட்டார் சைக்கிளின் (கிரோ கங் வகை) இலக்கம் NP BBW 5307 எனவும் விபத்தைக் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 3 =

*