;
Athirady Tamil News

பிரித்தானியா நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த 300 ஆண்டு பழமையான கட்டிடம்..!!

0

நீண்ட 10 ஆண்டுகளுக்கு பின்னர் பிரித்தானியாவை தாக்கிய பரிய நிலநடுக்கத்தில் சிக்கி 300 ஆண்டுகள் பழமையான கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது.

குறித்த காட்சிகள் தொடர்பில் வெளியான வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

தெற்கு வேல்ஸ் பகுதியில் அமைந்துள்ள Cwmllynfell-ல் நிலநடுக்கம் தாக்கிய ஒரு நிமிட இடைவெளியில் குறித்த கட்டிடம் தரைமட்டம் ஆகியுள்ளது.

உள்ளூர் நேரப்படி 2.20 மணி அளவில் நேற்று பிரித்தானியாவை நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் 4.4 என பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் 185 மைல்கள் தொலைவில் உள்ள டெவன் நகரின் Bow கிராமத்தில் 2.26 மணிக்கு குறித்த கட்டிடம் சரிந்து விழுந்துள்ளது.

திடீரென்று கட்டிடம் ஒன்று சரிந்து விழுவதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

குறித்த நிலநடுக்கத்தால் பல குடியிருப்புகள் பாதிப்புக்கு உள்ளானதாக தகவல் வந்தாலும் உயிரிழப்பு மற்றும் காயங்கள் தொடர்பில் எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

டெவன் நகரில் சரிந்து விழுந்த கட்டிடமானது 300 ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 − six =

*